இது ஸ்ட்ரெயிட்டனிங் சீசன். ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்கு முன்னும், அதன் பின்னும் சில விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது உங்கள் தலையில் பொடுகு இருக்க கூடாது. அப்படி இருந்தால் பொடுகால் பாதிக்கப்பட்ட முடியின் வேர்க்கால்கள் பலமாக இருக்காது. அதனால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய பயன்படுத்தும் கெமிக்கல்களை தாங்கும் அளவுக்கு உங்களில் முடியில் வலு இருக்காது. அதனால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.
உங்கள் கூந்தலின் நுனிகள் பிளவுபட்டு இருந்தால், அல்லது பாதிபாதியாக உடைந்து இருந்தாலோ, அந்த நிலையிலும் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யக் கூடாது.
உங்கள் முடிக்கு ஹென்னா போட்டு இருந்தால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் முன் அதை முழுவதுமாக நீக்கி விடவேண்டும்.
உங்கள் கூந்தலின் அடர்த்தி அதிகமாக இருந்தால் மட்டுமே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய வேண்டும். அடர்த்தி குறைவாக இருந்தால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யக்கூடாது.
உங்கள் கூந்தலின் தன்மையை பொறுத்து தான், எந்த அளவு க்ரீம் பயன்படுத்த வேண்டும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டைலிஸ்ட் முடிவு செய்வார்கள்.
ஸ்ட்ரெயிட்டனிங் செய்யும் போது பயன்படுத்தும் கெமிக்கல்கள் முடியின் வேர்க்கால்களில் படாமல் சிறிது இடைவெளி விட்டு பயன்படுத்த வேண்டும்.
ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பின்பும் முறையான கூந்தல் பராமரிப்பு அவசியம். ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பலன் அதிக நாட்கள் இருக்க, ஸ்டைலிஸ் ட் பரிந்துரைக்கும் ஷாம்பு, மற்றும் கண்டிஷனரை தான் பயன்படுத்த வேண்டும்.
ஸ்ட்ரெயிட்டனிங் செய்த பின்பு கூந்தலை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதையும் ஸ்டைலிஸ்டிடம் கேட்டு தெரிந்து கொண்டு பின்பற்றுவது அவசியம்.!!
No comments:
Post a Comment