இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்று நீண்ட தாடி வளர்ப்பது... அழகுக்காக தாடி வைக்கும் இளைஞர்கள், தங்களின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம்..
தாடி ஷேவ் பண்ணுவதால் சருமத்தில் உள்ள உயிரற்ற செல்களை நீக்கும். அதனால் அந்த இடங்களில் புதிய செல்கள் வளருவதால் முகம் பொலிவு பெறும்..
அதிக அளவில் தாடி வளர்ப்போருக்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக ஆகும்... அதனால் சருமத்தின் துவாரங்கள் அடைத்துக் கொள்ளும். இதனால் முகப்பரு உருவாகும்..
தாடி வைத்து இருந்தால் முகத்தில் அரிப்பு ஏற்படும்.. அதனால் தொடர்ந்து சொறிந்து கொண்டு இருந்தால் முகத்தில் தடிப்புகள் வர வாய்ப்பு உண்டு. ரெகுலராக ஷேவிங் செய்வதன் மூலம் முகத்தில் அரிப்பு வராமல் தடுக்கலாம். முகத்தில் தடிப்புகள் வரமாலும் காக்கலாம்.
நீங்கள் உணவு அருந்தும் போது உணவு துகள்கள் தாடியில் ஒட்டிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. அவற்றை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில் சருமத்தில் தொற்று நோய்கள் வர வாய்ப்பு உண்டு.
முகச்சவரம் செய்யும் போது பயன்படும் க்ரீம், ஆப்டர் ஷேவ் லோஷன் ஆகியவை சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும். ஈரப்பதம் உள்ள சருமம் இளமையாக தோற்றமளிக்க உதவும்..
பருக்களுக்கும், பொடுகு பிரச்சனைக்கும் நிறைய தொடர்பு உண்டு. தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு அது மீசை, தாடி ரோமங்களிலும் தொற்றும் வாய்ப்பு உண்டு. பொடுகு இருப்பவர்களுக்கு முகம், முதுகு பகுதியில் பருக்கள் வர வாய்ப்பு உண்டு.
முகத்தில் மட்டும் அல்லாமல் உங்கள் அக்குள், மற்றும் மர்ம இடங்களில் ரெகுலராக ஷேவ் செய்வதை வழக்கமாக்கி கொள்வது நல்லது..
No comments:
Post a Comment